வீடொன்றில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண் மரணம்
காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலன்வத்தை பகுதியில் காற்றுத் துப்பாக்கி இயங்கியதன் காரணமாகப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் காற்றுத் துப்பாக்கி இயங்கியதால் காயமடைந்த பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தெனியாக பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவராவார்.
பெண் கைது
உயிரிழந்த பெண் மற்றும் மற்றொரு பெண், இரு ஆண்கள் ஆகியோர் வீடொன்றில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்றைய தினம் பகல் பொழுதில் துப்பாக்கி இயங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை காலி பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.