மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் இன்றைய தினம் (23.03.2023) மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுத்த போது மின்சார வயரினை பிடித்த நிலையில் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லவிளாங்குளம்- வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுதாஜினி (38) என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணிற்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆன நிலையில் இந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
