ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள அகரகந்தை ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நாகசேனையில் இலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது தொடர்பில் இதுவரையும் தகவல் கிடைக்கப்பெறவில்லை என்று விசாரணைகளை முன்னெடுக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.
சம்பவ இடத்துக்கு நீதிவான் வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
