வடக்கில் 25 வீதிகளின் திருத்த பணிகள் ஆரம்பம்
வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா அலுவலகத்தில் நேற்று (01.01.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீதி அபிவிருத்திப் பணிகள் தை முதலாம் நாள் ஆரம்பிக்கப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டு அபிவிருத்தி ஆண்டாக இருக்கும்.
பல்வேறு செயற்திட்டங்கள்
யாழ். மாவட்டத்தில் 5 வீதிகளும், மன்னார் மாவட்டத்தில் ஆறு வீதிகளும், வவுனியா மாவட்டத்தில் எட்டு வீதிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு வீதிகளும் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு முழுவதுமே ஒரு அபிவிருத்திக்குரிய ஆண்டாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமில்லை. அந்த வகையில் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை அரசாங்கம் இந்த ஆண்டிலே நடத்த இருக்கின்றது.
விஷேடமாக வறுமை ஒழிப்பு செயற்திட்டத்தின் பிரதான பிரஜாசக்தி செயற்திட்டம் இன்றைய தினத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. அந்த வகையிலே அனைத்து மாவட்டங்களிலும் பிரஜாசக்தி குழுமத்தின் தலைவர்கள் உட்பட நிர்வாக குழுவினர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த பிரஜாசக்தி குழுவின் ஊடாக கிராம மட்டங்களில் மக்களுக்குரிய தேவைப்பாடுகள் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைப்படுத்திகளின் அடிப்படையில் அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட இருக்கின்றன" என தெரிவித்துள்ளார்.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri