கொழும்பில் நடந்த பயங்கர சம்பவம்.. பொலிஸார் வெளியிட்ட புகைப்படம்
கொழும்பு - கொஹுவலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கொஹுவலை பொலிஸ் பிரிவின் போதியவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்பு கொள்ளுங்கள்..
இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களில் ஒருவரை அடையாளம் கண்ட பிறகு, ஒரு பொலிஸ் கலைஞர் சந்தேக நபரின் உருவத்தை வரைந்துள்ளார்.

அதன்படி, சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
தொலைபேசி எண்கள் - OIC/கொஹுவலை பொலிஸ் நிலையம்
071-8591669 OIC/குற்றப் புலனாய்வுப் பிரிவு 071-4146727