லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம்
பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு முகாமையாளராக செயற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரால் இனவெறி பாகுபாடு காண்பித்தாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இதனையடுத்து அவருக்கு எதிராக அபாரம் விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் தனது முகாமையாளாரக இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தன்னை "அடிமை" என்று அழைத்ததாகவும், "இந்தியர்கள் மோசடி செய்பவர்கள்" எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஊழியர்களின் விடுமுறை
இந்தியர் என்பதால் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவரது முகாமையாளர் இலங்கையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.

அத்துடன் பணியிடத்தில் "அடிமை" என்றும் இன்னும் சில தரக்குறைவான சொற்களாலும் அழைத்தது இனவெறி பாகுபாட்டின் கீழ் வரும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் , அளவுக்கு அதிகமான நேரங்கள் வேலை செய்யுமாறு முகாமையாளர் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது விலகல் கடிதத்தை பாதிக்கப்பட்டவர் வழங்கினார். அதன்பின்னர் முகாமையாளர் அவரைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதோடு, மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகை
அவர் முறையாக விலகல் கடிதம் கொடுத்தும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இது சட்டப்படி தவறு என நீதிபதி தெரிவித்தார்.

நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையாக 62,690 பவுண்ட்ஸ்களும், விடுமுறை ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து மொத்தம் சுமார் 66,800 பவுண்ட்ஸ்களை வழங்க உத்தரவிட்டது.
மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிறுவனம் தனது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் குறைகளை முறையாகக் கையாளுவது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.