அரசியல்வாதியின் மகனால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரின் இரு வீடுகளில் விரிவான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு செல்ல தடை
இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளான இந்த பெண் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து ஜமால்தீனுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 24 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
