மியன்மாரில் சிக்கியுள்ள மகனை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கதறியழுத தாய்
மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தம்பலகமுவ பிரதேசத்தில் ஜனாதிபதி நேற்று (02) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் சிக்கியுள்ள தனது மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் தாய் ஒருவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி,
மியன்மார் அரசுடன் எல்லோரும் பேசுகின்றார்கள்... . இவர்கள் மியன்மாரில் எங்கு சிக்கிக் கொண்டார்கள் என்பதில் மியன்மார் அரசுக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. பயங்கரவாத குழு அவர்களை அழைத்துச் சென்றுள்ளது.
இலங்கையர்கள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மியன்மார் வெளியுறவு அமைச்சரிடம் எமது அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், தாய்லாந்து எல்லைக்கு அருகே மியன்மாரில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், தாய்லாந்துடனும் பேசினோம்." "நாங்கள் அந்த இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றி வருகின்றோம். தாய்லாந்தின் உதவியைப் பெற உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
