வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்று(29.01.2024) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட தகவல்
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருவதாக மடுக்கந்தை பகுதியிலுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு விசேட தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டர் சைக்கிளில் அந்த பெண் வந்த போது வைரவபுளியங்குளம், தொடருந்து நிலைய வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனை செய்த போது 920 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண்ணை கைது செய்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan