கொழும்பில் பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்ற தம்பதிக்கு அதிர்ச்சி
கொழும்பில் பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளருக்கு பழுதடைந்த சுப் வழங்கப்பட்டதாக பொரளை மருத்துவ பரிசோதகர் மேற்கொண்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 02 ஆம் திகதி இரவு உணவருந்தச் சென்ற தம்பதி பழுதடைந்த சுப்பை வழங்கியதாக கோட்டை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்தனர்.
அதற்கமைய, சுகாதார வைத்திய அதிகாரிகள் அங்கு வந்து மாதிரியை பொரளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சை
இந்த சூப்பை அருந்தியவர் சுப் கோப்பை பிடிக்காமல் சிரமத்திற்குள்ளாகி மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் ராகம மஹாபாவில் அமைந்துள்ள மக்கள் மருத்துவமனை என்ற மருத்துவ நிலையத்தில் வைத்திய சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதேவேளை குறித்த ஹோட்டலுக்கு எதிரான வழக்கை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு கோட்டை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
