களுத்துறையில் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இராணுவ வீரர்
களுத்துறை - ஹொரணை பகுதியில் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலுள்ள சிறிய குளத்திலிருந்து இன்று (29.01.2024) இராணுவ வீரரின் சடலத்தை அங்குருவத்தோட்ட பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எத்திலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
உயிரிழந்த இராணுவ வீரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இராணுவ முகாமில் நடைபெற்ற உடற் பயிற்சியின் போது கலந்து கொள்ளவில்லை எனவும் தேடப்பட்ட போதும் அவர் காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இராணுவ வீரரின் வீட்டாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam