கைதிக்கு போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது
வவுனியா (Vavuniya) சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு போதைப் பொருள் கொடுக்க முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (24) வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 28 வயதுடைய குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் மீட்பு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் குற்றச்செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் மூன்று மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தரின் வழக்கு இன்று (24) வவுனியா நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணைக்காக வருகை தந்த அவரது மனைவி நீதிமன்றத்தில் இருந்து சந்தேகநபரை சிறைச்சாலை கொண்டு சென்ற போது அவருடன் உரையாடி பொதி ஒன்றை வழங்கியுள்ளார்.
இதில் சந்தேகமடைந்த சிறைக் காவலர்கள் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அந்தப் பொதியில் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, பொலிஸாரால் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |