சகோதரர்களுக்கிடையில் கடும் மோதல்! ஒருவர் பலி
காலி (Galle) - கரந்தெனிய பிரதேசத்தில் சகோதரர்களுக்கிடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணி விற்பனை தொடர்பில் அண்ணனுக்கும் இரண்டு தம்பிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக மாறியுள்ளது.
உயிரிழப்பு
இதன்போது அண்ணன் மீது தம்பிகளில் ஒருவர் மண்வெட்டியால் வெட்டியதில் படுகாயமடைந்த அவர், அயலவர்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான (39 வயது) நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கரந்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam