கொழும்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
கொழும்பி்ல் போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் நேற்று(15) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் தொட்டலங்காவில் உள்ள மெத்சண்ட செவன வீடமைப்புத் திட்டத்தில் இருந்து இந்த போதைவஸ்து கடத்தலை நடத்தி வந்துள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை
குறித்த நபர் கைது செய்யப்பட்டபோது பல மில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட 100 கிராம் மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எல குணாவின் சகோதரரான சிவா என்பவரின் நெருங்கிய நண்பி என்றும் கூறப்படுகிறது.
மேலும் சந்தேகநபர் எதிர்வரும் வியாழக்கிழமை(19) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
