கணவனின் சகோதரியின் புகைப்படத்தை வட்ஸ் அப் செய்த பெண் கைது
தனது கணவனின் சகோதரியின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ் அப் மூலம் வேறு நபர்களுக்கு அனுப்பினார் எனக் கூறப்படும் பெண்ணொருவரை கண்டி பொலிஸ் பிரிவின் கணனி குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த பெண் மாத்தளை பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரரின் மனைவி தனது நிர்வாணப் படங்களை சிலருக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கண்டி கணனி குற்றவியல் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண், தனது கணவனின் சகோதரியுடன் நட்பாக இருந்துள்ளதுடன் தற்போது இருவருக்கும் இடையில் பகை ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மற்றும் முறைப்பாடு செய்த பெண்கள் இருவரும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
