இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்ய சுவிஸ் அரசாங்கம் உதவி
இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.
அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பிற்கான சுவிட்சர்லாந்து முகவர் நிறுவனத்தினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்டுள்ள நிதி
உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் சுவிட்சர்லாந்து சுமார் 800,000 சுவிஸ் பிராங்குகளை உதவியாக வழங்கியுள்ளது.
விவசாயத்தில் ஈடுபடும் கிராமிய சமூகத்திற்கு இந்த நிதி உதவி மூலம் நலன்கள் வழங்கப்பட உள்ளதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் மூலம் இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வறட்சி ஏற்படக்கூடிய ஐந்து விவசாய மாவட்டங்களைச் சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
இலங்கைக்கு உதவும் சுவிட்சர்லாந்து
இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு சுவிட்சர்லாந்து பல்வேறு வழிகளில் உதவி வருவதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பொர்கலர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிகள் ஒட்டுமொத்த சனத்தொகைக்கும் நன்மை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
