ராஜபக்சக்கள் இன்றி நாட்டை ஆட்சி செய்ய முடியாது – நாமல்
ராஜபக்சக்கள் இன்றி நாட்டை ஆட்சி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச ஒருவர் இன்றி தேசிய மக்கள் சக்திக்கு அன்றாட அரச நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் அரசாங்கத்தின் இயலாமையை குறிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
கிராமிய அரசியல்
அரசாங்கமும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு மஹிந்த ராஜபக்ச ஓர் 'பிராண்ட்'(Brand) ஆகும் எனவும் மகிந்த ராஜபக்சவின் பின்னணியிலேயே கிராமிய அரசியல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி பிரசாரம் செய்வதிலேயே அரசாங்கம் அரசியலை மேற்கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விஜேராம வீட்டின் பெறுமதியை மதிப்பீடு செய்தவர்களே அரகலய போராட்டத்தில் வீடுகள் சேதமடைந்த வீடுகளையும் மதிப்பீடு செய்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
வீடுகளை எரித்தமை குறித்து பேசும் தரப்பினர் வீடுகளை யார் எரித்தார்கள் என்பது பற்றி பேசுவதில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |