விசமிகளால் திருடப்படும் திருகோணமலை - வானாறு பாலத்தின் இரும்பு கம்பிகள்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிக்காடு பகுதியில் அமைந்திருக்கும் வானாறு பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதியான இரும்பு கம்பிகள் அடையாளம் தெரியாதோரால் நாளுக்கு நாள் திருடப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த பாலமாகது போட்டான்காட்டு சந்தி வீதி ஊடாக, அக்போபுர, அக்போகம , சீனிபுர, வட்டுக்கச்சி, மெதகம, போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான போக்குவரத்து மார்க்கமாகும்.
இந்நிலையில், நாளாந்தம் இந்தப் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பிரயாணம் செய்து வருகின்றனர்.
பொலிஸார் விசாரணை
நான்கு வருடங்களுக்கு முன் கந்தளாய் பிரதேச சபை ஊடாக நாற்பது லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, இந்தப் பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரும்புக் கம்பிகள் அடையாளம் தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இது குறித்து கந்தளாய் பொலிஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |