"1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள்" : மு.க.ஸ்டாலினிற்கு கோரிக்கை(Photo)

M. K. Stalin Tamil nadu Sri Lankan Peoples India
By Chandramathi Jun 07, 2022 06:43 AM GMT
Report

“தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின், தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியாளர்களை நாடு கடத்தி எமது 1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள்” என பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தின் நிதி மோசடி தொடர்பாக விசேட செய்தியாளர் மாநாடு கல்முனை தனியார் மண்டபத்தில் நேற்று(6) இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

மக்களின் கோரிக்கை

மேலும் கருத்து தெரிவிக்கையில், “தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியிலும் எமக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கின்ற மு.க.ஸ்டாலின், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் என்ற பெயரில் 200 கோடி ரூபாவினை மோசடி செய்துள்ளனர்.

"1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள்" : மு.க.ஸ்டாலினிற்கு கோரிக்கை(Photo) | Wipe Away Families Demand Mk Stalin

இந்த மோசடிகாரர்கள் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தப்பி சென்று, தற்போது திருச்சி சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

சிஹாப் சரீப் மற்றும் அவரது மனைவி பர்சானா மார்க்கார் இருவருமே இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது விசாரணைகள் அனைத்தும் அங்கு நிறைவு பெற்றிருப்பதாக நாம் அறிகின்றோம். இதற்கு காரணம் இந்தியா தமிழ் நாட்டுடன் நாம் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளோம்.

"1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள்" : மு.க.ஸ்டாலினிற்கு கோரிக்கை(Photo) | Wipe Away Families Demand Mk Stalin

மேலும் 1400 குடும்பங்கள் இவர்களது நிதி நிறுவனத்தில் பண வைப்பு செய்து ஏமாற்றப்பட்டுள்ளார்கள். தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மிக சிரமங்களை நாம் எதிர்கொள்கின்றோம்.

அத்துடன் பொருளாதார நெருக்கடியான இக்கட்டான சூழலில் எமது நாட்டிற்கு பல்வேறு உதவிகள் செய்து எமது மனங்களில் தற்போது இடம்பிடித்துள்ளீர்கள்.

நிதி மோசடி

நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த இந்த நிதி நிறுவனம் கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் உள்ளடங்களாக கிளைகளை ஆரம்பித்து இஸ்லாத்தை முன்னிறுத்தி சில மௌலவிகளின் ஆசிர்வாதத்துடன் எமது மக்களை ஏமாற்றியுள்ளனர்.

"1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள்" : மு.க.ஸ்டாலினிற்கு கோரிக்கை(Photo) | Wipe Away Families Demand Mk Stalin

சர்வேதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மோசடியாளர்களை உங்கள் நாட்டில் தடுத்து வைத்துள்ளார்கள்.எனவே இவர்களை எமது நாட்டிற்கு நாடு கடத்தி எமது 1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த விடயம் குறித்து ஜனாதிபதி அடங்கலாக அரசின் முக்கியஸ்தர்கள் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பின் தலைவர் ஏ.றிஸ்வாட், செயலாளர் ஏ.றஸாக், உப தலைவர் ஐ.எம். பர்ஸாத் பொருலாளர் எம்.ஐ.எம் வகீல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US