மன்னாரில் காற்றாலை அமைப்பு - ஜனாதிபதியுடனான சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Mannar Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Rakesh Aug 14, 2025 04:10 AM GMT
Report

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதுடன், அதற்குள் அந்தக் காற்றாலைத் திட்டம் தொடர்பாக அரசு நியமிக்கும் தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவர் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், அதன் பின்னர் இதுவரை திட்டமிடப்பட்டு அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள 70 மெகா வாற் மின் உற்பத்தித் திட்டம் அப்படியே முன்னெடுக்கப்படும்.

கலந்துரையாடல்

நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கிய ஆயர் இராயப்பு ஜோசப்

நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கிய ஆயர் இராயப்பு ஜோசப்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் மற்றும் மன்னார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். அங்கேயே மேற்படி தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டன என அறியவந்தது.

மன்னாரில் காற்றாலை அமைப்பு - ஜனாதிபதியுடனான சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Wind Turbine System In Mannar Suspended One Month

மன்னார் தீவில், மக்கள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு மன்னார் மக்கள் எதிரானவர்கள் அல்லர் எனவும், மன்னார் தீவுக்குள் - குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்க்கின்றனர் எனவும் ஜனாதிபதியிடம் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்ட விடயம்

கடந்த கால இனவாத அரசுகள் இத்தகைய காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ள போதும், கற்றாலை அமைப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

மன்னாரில் காற்றாலை அமைப்பு - ஜனாதிபதியுடனான சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Wind Turbine System In Mannar Suspended One Month

காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதுடன், இந்த விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் இதன்போது மன்னார் காற்றாலைத் திட்டத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டது.

விரைவில் தூங்கா நகரமாக மாற்றப்படவுள்ள கண்டி

விரைவில் தூங்கா நகரமாக மாற்றப்படவுள்ள கண்டி

இதற்குப் பதில் அளித்துப் பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, "இது தனித்து மன்னார் தீவுக்குரிய பிரச்சினை அல்ல. மின்சார விநியோகம் தேசிய பிரச்சினை. அதற்கான தீர்வின் அடிப்படையிலேயே விடயம் அணுகப்பட வேண்டும்." - என்றார். மின் உற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்ட போது பல கிராமங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கியமையை ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

ஜனாதிபதியின் விளக்கம்

"தேசிய பிரச்சினைக்குத் தீர்வாக அந்தக் கிராமங்கள், குடியிருப்புகளின் பாதிப்பு தவிர்க்க முடியாததாயிற்று. எனினும் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு அப்போது மாற்று வழிகளில் தீர்வுகள், நிவாரணங்கள், ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டன" என்றும் ஜனாதிபதி விளக்கினார்.

மன்னாரில் காற்றாலை அமைப்பு - ஜனாதிபதியுடனான சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Wind Turbine System In Mannar Suspended One Month

"இப்போதும் இதுவரை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டேயாக வேண்டும். அவற்றை நிறுத்தினால் பெரும் நெருக்கடிகள் வரும். 2028இல் உரிய மின் உற்பத்தி இல்லாமல் நாடு தழுவிய மின்வெட்டு வரக்கூடிய ஆபத்து உண்டு. ஆகையால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்ட திட்டங்களுக்கு ஒத்துழையுங்கள்.

அவற்றை அமைப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து எனது பிரதிநிதிகள் குழு மூலம் விரிவாக அறிந்து கொள்வேன். பிரச்சினைகளுக்கு உரிய தீர்வையும் பெற்றுத் தருவேன். மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்து ஆராய்வதற்காக இந்தத் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தலாம். அச்சமயத்தில் உரிய பிரதிநிதிகள் மூலம் பிரதேச மக்களின் பிரச்சினைகள், கருத்துக்கள் உள்வாங்கப்படும்.

அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உடனடியாக முன்னெடுப்போம். ஆகவே, திட்டமிட்டு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்ட ஏற்பாடுகளை நிறுத்த முயற்சிக்க வேண்டாம். இனிமேல் புதிய திட்டங்களை மன்னார் தீவைத் தவிர்த்து வெளியில் ஆலோசிக்கலாம்." என்றார் ஜனாதிபதி.

இலங்கையில் மோசமாகியுள்ள மனித உரிமை மீறல்கள்! அமெரிக்கா கவலை

இலங்கையில் மோசமாகியுள்ள மனித உரிமை மீறல்கள்! அமெரிக்கா கவலை

பாதிப்புகள்

மன்னார் தீவுக்குள் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், பாதிப்புகள், பின்னடைவுகள், பிரச்சினைகள் பற்றி மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தார்.

மன்னாரில் காற்றாலை அமைப்பு - ஜனாதிபதியுடனான சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Wind Turbine System In Mannar Suspended One Month

இந்தச் சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாத் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Gallery
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US