பிச்சைக்கு பணம் வாங்கி பிரச்சினைகளை தீர்க்க முடியாது : விமல் (Video)
இந்தியாவிடம் இப்படி பிச்சைக்கு பணம் வாங்கி வந்து இலங்கையில் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று யாரவது நினைத்துக்கொண்டு இருப்பார்கள் என்றால் அப்படி நடக்காது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமகால அரசியல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நிதி அமைச்சர் சொல்கின்றார், மின்சார தடை ,எரிவாயு, எரிபொருளுக்கான வரிசை அனைத்தும் அடுத்து வரும் வாரங்களில் இல்லாமல் போய்விடும் என்று. அடுத்த வருடமளவில் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.
இங்கு செய்ய வேண்டிய வேலைகளை இவர்கள் செய்யவில்லை. இப் பிரச்சினைகளை இவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.
மக்களின் கஷ்டங்களை துன்பங்களை பயன்படுத்தி இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் வேண்டுமானதை கொடுப்பதை தான் இவர்கள் செய்கின்றார்கள். அதற்கான வழியை தான் இவர்கள் தயார்ப்படுத்திக்கொண்டுள்ளார்கள்.
இதுவரை 3 ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளனர். அதன் பின்னர் தான் அமைச்சரவை அனுமதியை பெறுகின்றனர். இந்த நாட்டின் நிறைய அரச உடைமைகளை வெளிநாட்டவர்களுக்கு கொடுக்க பார்க்கின்றார்கள்.
அமெரிக்காவில் இருந்து ஒரு குழு இலங்கைக்கு வந்துள்ளது. MCC உடன்படிக்கையை வேறுவிதமாக ஆரம்பிப்பதற்கு தான் இவர்கள் வருகின்றார்கள்.
மக்கள் பலத்தால் கொண்டுவரப்பட்ட இந்த அரசாங்கம் இன்று அமெரிக்காவின் பக்கம் இழுபட்டு செல்கின்றது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam