சுதந்திர தின நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் : அரசை சாடும் விமல் வீரவன்ச
இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளில் வழமைப் போல கலந்து கொள்ளும் இராணுவ படையணிகள் நாற்பது வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,
இவ்வாறான கட்டுப்பாடுகள் பணத்தை மீதப்படுத்தவா? வழமைப்போல் சுதந்திர தின ஊர்வலத்தில் முதலில் கொண்டுவரப்படும் சிங்கத்தின் உருவம் தாங்கிய பேழையும் இருக்கவில்லை.இந்த சிங்கத்தின் உருவம் வீசப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தின் கௌரவத்தை குறைத்தல்
இது ஊர்வலத்தின் பக்கம் கூட கொண்டு வரக் கூடாது என செய்துள்ளனர்.அதில் கலந்து கொள்ளும் இராணுவ வீரர்களும் அதன் அபிமானத்தை உணர முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கூறுகிறார்,கடனுக்கு வாங்கிய ஆயுதங்களை காட்சிப்படுத்துவதால் நாட்டுக்கு பெருமை ஏற்படப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் கடன் வாங்கி கட்டிய வீட்டில் இருக்க வேண்டாம் அதுவும் பெருமையை தராது.அதேபோல் கடனுக்கு வாங்க தீர்மானித்துள்ள டபெல் கெப் வாகனங்களில் செல்ல வேண்டாம் அது உங்களுக்கு பெருமை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri