அரசாங்கம் தன்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
போர்வீரர்கள் நினைவுத் தூபி அருகே இடம்பெற்ற சம்பவத்தின் அடிப்படையில் தன்னைக் கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
போர்வீரர்கள் நினைவுத் தூபி அருகே நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, அடுத்த திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
அதன் போது தன்னையும் தனது குழுவினரையும் பொலிஸார் கைது செய்யக்கூடும் என்ற தகவல் தனக்குக் கிடைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இருந்தாலும் பொலிஸாரின் அழைப்பின் பிரகாரம் அன்றைய தினம் தான் பொலிஸாரின் முன் முன்னிலையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தான் அல்லது தனது குழுவினர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்திருந்தால் குற்றம் நடந்த நேரத்தில் தங்களைக் கைது செய்ய பொலிஸாருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருந்தது என்று விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு! வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்கள்
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri