நுவரெலியாவில் அடர் பனிமூட்டம்
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23.05.2026) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபனி நிலவியது.
குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலைகளில் பனிமூட்டம் நிலவியது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் நுவரெலியா பிரதான நகரில் மிதமான மழை இடைக்கிடையே கொட்டி தீர்த்து வருகிறது.
கடுமையான பனிமூட்டம்
இதில் நுவரெலியா நகருக்கு உள் நுழையக்கூடிய பிரதான பிரதான வீதிகள் அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு இந்த கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.

இதில் நுவரெலியா - கண்டி மற்றும் நுவரெலியா - ஹட்டன் போன்ற வீதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும் நிலவி வருவதால் பொது மக்கள் மற்றும் வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடைய இயல்பு வாழ்கை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கிறனர்.
இலங்கைக்கு FBI புலனாய்வுக்குழு வந்துள்ளதாக வெளியான தகவல்! அமெரிக்கத்தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு






கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri