தாய்வானின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் பதவியேற்பு
தாய்வானின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் (William Lai Ching-te) கூட்டணி கட்சி ஆதரவுடன் பதவியேற்றுள்ளார்.
தைபேயில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்இன்று(20.05.2024) நடந்த இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிரிவினைவாதி
கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் தாய்வான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிற நிலையில் தங்கள் நாட்டை தனி நாடாக நிலை நிறுத்துவதில் தாய்வான் உறுதியாக உள்ளது.

1996ஆ ம் ஆண்டு முதல் தைவானில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள லாங் சிங் டே சீனாவுக்கு எதிரான கொள்கையினை கொண்டவர். இவர் ஜனாதிபதியானது சீனாவுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இவரை ஆபத்தான பிரிவினைவாதி என சீனா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri