இலங்கையர்களுக்கு மற்றுமொரு பேரிடி! 835 ரூபாவினால் அதிகரிக்கவுள்ள சமையல் எரிவாயு விலை?
இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு குறித்த செய்தி தொடர்ச்சியாக வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில்,12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்தமையால் இவ்வாறு எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எரிவாயு கொள்கலன் விலையை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது லிட்ரோ நிறுவன வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று, இரண்டாயிரத்து 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 835 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டால், சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை மூவாயிரத்து 535 ரூபாவாக உயர்வடையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
