நாளைய தினம் விடுதலை செய்யப்படுவாரா ரஞ்சன்?:அவரது முகநூலில் இடப்பட்டுள்ள பதிவு
இலங்கையின் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) விடுதலை செய்யப்படவுள்ளதாக சூசகமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரஞ்சன் ராமநாயக்கவின் முகநூல் பகத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், வெலிகடையில் இருந்து வெளியில் வரும் போது, தன்னை நேசித்தவர்கள் காண ஆவலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 4 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு ரஞ்சனை அன்புடன் வரவேற்க நீங்களும் வாருங்கள் எனவும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள திரைப்படத்துறையின் சூப்பர் ஸ்டாரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள், திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இவ்வாறான நிலையில், இலங்கை சுதந்திர தினத்தன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் போது, ரஞ்சனும் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.