அரிசியினை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய அரசாங்கம் இடமளிக்காது - அமைச்சர் பந்துல குணவர்த்தன

minister bandula gunawardena
By Independent Writer Feb 14, 2021 07:48 PM GMT
Report

நெல்லினை என்ன விலைக்கு கொள்வனவு செய்தாலும், அரிசியினை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வற்கு அரசாங்கம் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற வடக்கில் காலபோக நெற்கொள்வனவிற்கான சௌபாக்கியா கடன்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ஸ அவர்களின் காலகட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை நாம் மீளபெறாது இருந்தோம். பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மக்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தோம்.

5 மில்லியன் ரூபாய் நிதியில் மினி கோப்சிற்றி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நான் கல்வி அமைச்சராக வந்த பின் கூட்டுறவுச் சங்கம் ஊடாக செயற்யப்பட்ட வேலைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்குரிய வேலைகள் எதுவும் செய்யாமல் எல்லா விடயமும் கிடப்பில் இருந்தது. எதிர்கட்சியினர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களை சரியான முறையில் செயற்படுத்தவில்லை.

அவர்கள் தனியார் வர்த்தகர்கள் இயங்குவதற்கான வசதிகளை செய்தார்களே தவிர, பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாக நாட்டிற்கு தேவையானவற்றை செய்ய அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தது. எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் அதிகபடியான வாக்குளால் வெற்றி பெற்ற பின் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையபானவற்றை செய்வதற்கு எதிர்பார்த்திருந்தார்.

ஜனாதிபதியின் சிந்தனையில் கீழ் மக்களுக்கான பொருட்கள் சேவைகளின் விலையைக் குறைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பது தான நோக்கம். கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டிற்கு தேவையான உற்பத்திகளை செய்யாது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது தான் அவர்களின் நோக்கமாக இருந்தது.

அரிசி, உழுந்து, பயறு உள்ளிட்ட அவசியமான பொருட்கள் இல்லாமல் தேவையில்லாத பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொண்டு இருந்தார்கள். தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், நியாய விலையில் பொருட்களைப் பெற முடியாமலும் மக்கள; பிரச்சனைகளை எதிர்நோக்கினர். ஜனாதிபதியின் முடிவுக்கு ஏற்ப எமது நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய விடயங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டில் இருந்து எந்தவொரு ஆட்சியாளரும் எடுக்க முடியாத பெரியதொரு விடயத்தை இதன் மூலம் ஜனாதிபதி செய்துள்ளார். மஞ்சள், கௌப்பி, பயறு போன்றன தற்போதும் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன் நீங்கள் என்ன விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்தாலும், அரிசி 100 ரூபாய்க்கு மேல் எமது ஆட்சிக் காலத்தில் விற்பனை செய்ய மாட்டோம். 100 ரூபாய்க்குள் தான் அரிசியினை கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

நெல்லினை என்ன விலைக்கு என்றாலும் பெறுங்கள். ஆனால் அரிசி 100 ரூபாயக்குள் தான் இருக்க வேண்டும். அரசாங்கம் விவசாயிகளுக்கு நிறைய விடயங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது. மானிய உரம், இலகுவான கடன் திட்டம், அரிசி கட்டுப்பாட்டு விலை என பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அரிசியினை மக்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.

மக்களுக்கு தேவையான 27 பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு இவற்றை இந்த விலைகளில் பெற்றுக் கொள்ள முடியும். சதொச நிறுவனத்தில் 421 கிளைகள் இருக்கிறது. தற்போது சதொசவின் வருமானம் அதிகரித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களும் அதேபோல் செயற்படக் கூடியதாக இருக்கும். அங்கு கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களைப் பெற முடியும். பொருட்களை கொள்வனவு செய்யும் போது இடைத்தரகர்களினால் தான் விலை அதிகரிக்கிறது.

பொருட்களை உற்பத்தி செய்பவர்களே விற்பனை செய்வதற்கான இடங்களை அமைத்துக் கொடுத்தால் இலாபத்தை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அனுராதபுரம், மிகிந்தலை போன்ற இடங்களில் அவ்வாறான நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி பெற உள்ளோம்.

ரஜவாசல என்ற பெயரில் எல்லா அரச நிறுவனங்களையும் ஒன்றுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் இலகுவாக ஒரு இடத்திலேயே பொருட்களைப் பெற முடியும். ரஜவாசல என்ற திட்டத்தை வவுனியா மாவட்டத்திற்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது வடக்கில் அமைந்துள்ள வவுனியா, நானாட்டான், பூநகரி, தென்மராட்சி கிழக்கு, கரைச்சிதெற்கு, கரைத்துறைப்பற்று, விசுவமடு, வவுனியா வடக்கு ஆகிய 8 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களிற்கு மொத்தமாக 90 இலட்சம் ரூபாய்நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தன, ராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண, வடமாகாண ஆளுனர் எம்.சாள்ஸ், வடமாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  

நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US