பொரளையில் ஏற்பட்ட பரபரப்பு.. சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்
பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துபாயில் கைது செய்யப்பட்ட ‘வானாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இன்று (23) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கைக்குண்டை வீசும் காட்சி அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் இவ்வாறான கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் புதிய போக்கு தற்போது அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீதும் இதேபோன்ற கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு கைக்குண்டு வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணொளிக்கு இங்கே அழுத்தவும்..
நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு
யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர்
சூடுபிடிக்கும் காவி உடை களையப்பட்ட விவகாரம் - அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகும் மகா சங்கத்தினர்
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam