வனவிலங்கு கடத்தல் வழக்கு : குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
பௌத்தர்களின் அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதியின் மேல் பிரகாரத்தின் பிரதான கப்பு மஹத்தாவிற்கு (Chief Lay Custodian) எதிராக நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிதிகல வனஜீவராசிகள் அலுவலகத்தின் வனத்துறை அதிகாரிக்கு, அனுராதபுரம் மேலதிக நீதிவான் தாசுனி ஹப்புஆரச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்
மான் இறைச்சி, அழுங்கு இறைச்சி, ஆமை இறைச்சி, 14 ஆமை முட்டைகள், 6 உயிருள்ள நட்சத்திர ஆமைகள் மற்றும் யானை தந்தத்தினால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள் ஆகியவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக இவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

காட்டு விலங்கு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், தற்போது பிணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.