புத்தளத்தில் காட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர் பலி
புத்தளம்- வனாத்தவில்லு - தேனுவர பகுதியில் மின்சார வேலி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பன்முக சேவை ஊழியர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.3.2026) இடம்பெற்றுள்ளது.
வனாத்தவில்லு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இவர் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வனாத்தவில்லு அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு ஏனைய ஊழியர்களுடன் இணைந்து காவற்பணியில் ஈடுபட்டிருந்த அவர், பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்கு முன்னர் மற்றுமொரு தேவைக்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார்.

இதன்போதே அங்கிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளதில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri