நிலக்கரி கொள்வனவு குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை! நளிந்த பதிலடி
இலங்கையின் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(10.4.2026) நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி விநியோகிக்கும் செயல்முறையானது தற்போதைய அரசால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல.
நிலக்கரி கொள்வனவு
இது கடந்த 15 வருடங்களாகத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் ஒரு பொறிமுறையாகும். நிலக்கரியின் தரம் குறைவாகக் காணப்பட்ட சந்தர்ப்பங்களில், அதற்குப் பொறுப்பான விநியோகஸ்தர்களிடமிருந்து பாரிய தொகை அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

இதன்படி, முதலாவது கப்பலுக்கு 2.07 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இரண்டாவது கப்பலுக்கு 4 இலட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் அபராதமாக அறவிடப்பட்டுள்ளன.ஏனைய கப்பல்களுக்கும் முறையான வரிசைப்படி அபராதங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.
நிலக்கரி இறக்குமதியின் போது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிதி இழப்புகள் குறித்து ஆராய்வதற்காக மொறட்டுவை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஊழல் முறைகேடு
தற்போதைய கொள்முதல் செயல்முறைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வித ஊழல் முறைகேடுகளுக்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை.

மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாத்து, நாட்டுக்குத் தேவையான மின்சார உற்பத்திக்காகத் தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்ள அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam