தனியார் வங்கியில் நிதி மோசடி: வாடிக்கையாளர் வைப்புக்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இடம்பெற்ற உள்ளக நிதி மோசடி தொடர்பில் தாம் மிக நெருக்கமாக அவதானித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 10ஆம் திகதி மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய மூலதனம் மற்றும் பணப்புழக்கம்
ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
அதில் மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி தேசிய அபிவிருத்தி வங்கி போதிய மூலதனம் மற்றும் பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், அவை குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தினால் வாடிக்கையாளர் கணக்குகளுக்கோ அல்லது வைப்புக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
வங்கியின் ஸ்திரத்தன்மையைப் பேணவும், வைப்புச் செய்தவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருக்கிறது. இது தொடர்பாக வங்கியுடனும் ஏனைய தரப்பினருடனும் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நிதி மோசடி
முன்னதாக, தமது ஊழியர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபா பெறுமதியான உள்ளக நிதி மோசடி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய அபிவிருத்தி வங்கி வெளிப்படுத்தியிருந்தது. இதன்போது வாடிக்கையாளர்களின் மீதிக் கணக்குகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும், வங்கியின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புறப்பட்ட ஈரானிய தூதுக்குழுவினர்! போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam