தேராவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் : நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாலை வேளையிலேயே ஊர்மனைக்குள் வருகின்ற யானைகள் அதிகாலை வரை ஊரில் உள்ள பயன் தரும் மரங்கள் மற்றும் தோட்ட செய்கைகள், சொத்துக்கள் என பலவற்றிற்கு சேதங்களை ஏற்படுத்தி வருவதோடு இதனால் தொடர்ச்சியாக தாம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிர் ஆபத்துக்கள்
குறிப்பாக, அண்மை நாட்களாக வருகை தந்த யானைகள் தங்களது பயன்தரு தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்களை நாசம் செய்துள்ளதோடு வேலிகளுக்காக அமைத்த தூண்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளது.

இதனால் வீடுகளில் வாழும் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டியுள்ளதோடு தமது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
யானை வேலிகள் அமைப்பதாக பல தடவைகள் கூறப்பட்டாலும் இதுவரை அதற்கான எந்த விதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படாமல் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் தமது பகுதிகளுக்கு யானை வேலிகளை அமைத்து யானை தொல்லையிலிருந்து தம்மை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பல்வேறு இடங்களிலும் யானைகளினால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் உயிராபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பதாக தமது பகுதிக்கு யானை வேலியை அமைத்து பயிர்கள் மற்றும் உடைமைகள் உயிர்களை பாதுகாக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri