வட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாளை முதல் (03) வடக்கு மாகாணத்தின் வவுனியா, மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு, சின்னத்தம்பனை, பாலைப் பாணி, மூன்றுமுறிப்பு, ஐயன் குளம், மடு,கீரி சுட்டான், தட்டாங்குளம், பகுதிகளில் பகல் காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை பகல் பொழுது வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் இனை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை (Heat Waves) வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரும் காலை 7.00 மணிக்கு முன்னரும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இம்மழை அதிகரிக்கும்.
வெப்ப அலை
வெப்பநிலையின் பாதிப்புக்களை தற்காலிகமாக தணித்து குறுகிய காலத்திற்கு மட்டுமே சௌகரியமான வானிலையை உருவாக்கும். முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டது போன்று, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்.
எனவே, அதிகரிக்கும் வெப்பநிலை, வெப்ப அலை தொடர்பிலும் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது.
அதிகரித்த வெப்பநிலையை கருத்தில் கொண்டு எமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வது உசிதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
