யாழில் வாள் வெட்டு: 22 பேர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம்(Jaffna) புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 22 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர் வைத்தியசலையில் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் அனுமதிக்கப்பட்டமையால் , வைத்தியர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையினுள் மோதல்
அதேவேளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள், வைத்தியசாலையினுள்ளும் மோதல் போக்குடன் காணப்பட்டதாகவும், மோதலில் ஈடுபடவும் முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் காயமடைந்த 22 பேரில் சிலர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
