போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது
புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரிடம் போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01.04.2024) கொழும்பு - டார்லி (Colombo-Darley) வீதியில் பதிவாகியுள்ளது.
புலனாய்வு உத்தியோகத்தர் தனது வழமையான அலுவல் நிமித்தம் டார்லி வீதியில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த இளைஞரொருவர் போலியான கைத்துப்பாக்கியொன்றைக் காட்டி அவரை அச்சுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து புலனாய்வு உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனை மத்திய அதிவேகப் பாதையில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 22 வயதான இளைஞன் என்றும் சாரதியாக பணியாற்றுபவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
