திருகோணமலை பாலத்தோப்பூர் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாலத்தோப்பூர் கிராமத்திற்குள் இன்று (24.10.2025) அதிகாலை புகுந்த காட்டு யானைகள், பயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளன.
கிராமத்திற்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த தென்னை மரங்கள், வாழை, மா போன்ற பயிர்களை அழித்ததுடன், பாதுகாப்பு வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளன.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாலத்தோப்பூர் கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் கோரிக்கை
தாங்கள் கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்துவதால் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளையும், கஷ்டங்களையும் சந்திப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சீரான வாழ்வாதாரத்தை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளின் தொல்லைகளை உடனடியாக கட்டுப்படுத்த உரிய அரச மற்றும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலத்தோப்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




