மட்டக்களப்பில் கிராமத்திற்குள் படையெடுத்த காட்டுயானைகள்
மட்டக்களப்பு - படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட வெல்லாவெளிப் பகுதியில் உட்புகுந்த காட்டு யானைகளால் அப்பகுதியில் பெரும் பதட்ட நிலமை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (05.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 5 காட்டுயானைகள் கூட்டமாக வெல்லாவெளிப் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளன.
யானைகளின் அட்டகாசங்கள்
இதனால் கால போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளும் பெரும் பதட்டத்தின் மத்தியில் அவர்களது வேலைகளை முன்னெடுத்திருந்தனர்.
@tamilwinnews மட்டக்களப்பிற்கு படையெடுக்கும் காட்டு யானைகள்! #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Elephant ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இந்த நிலையில் வெல்லாவெளியில் அமைந்துள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் யானை வெடிகளை கொழுத்தி அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய் காட்டுப்பகுதிக்குள் யானைக் கூட்டத்தை துரத்தி விட்டுள்ளனர்.
எனினும் அப்பகுதியில் மிக நீண்டகாலமாக காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும் அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
