நிமல் சிறிபால டி சில்வா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
தற்போதைய போக்குவரத்து அமைச்சர் தனது பணிகளில் திறமையானவர் அல்ல எனவும்அவர் பேச்சு வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (05.03.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் சுப்பர் டீசலின் விலையை குறைக்காவிட்டாலும், பேருந்து உரிமையாளர்கள் தமது சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் ஆகியும் தனியார் பேருந்து துறைக்கு எதுவும் செய்யப்படவில்லை.
3,000 பேருந்துகளை இயக்கும் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு செலவு ஏற்படுவதாக அவர் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
மேலும், 3.000 பேருந்துகளை இயக்குவதன் மூலம் நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபா நட்டம் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்படுமானால், நாளொன்றுக்கு 14,000 பேருந்துகளை இயக்கும் போது தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எவ்வளவு நட்டம் ஏற்படும் என்பதை அமைச்சர் சிந்திக்க வேண்டும்.
இதேவேளை கடந்த பத்து வருடங்களாக முன்பணம் செலுத்தும் அட்டை முறையை தாம் முன்மொழிந்து வந்தாலும், அந்த வேலைத்திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |