திருகோணமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்: உயிர் தப்பிய விவசாயி

Trincomalee Elephant
By H. A. Roshan Nov 22, 2025 03:06 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த கிராமத்தில் மாலை வேலையில் யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து விட்டு செல்வதாக தெரிவிக்கின்றனர்.

பாலம் போட்டாறு,பத்தினிபுரம்,இக்பால் நகர் கிராம மக்களின் அன்றாட தொழிலாக தோட்டச் செய்கை,விவசாயம் என காணப்படுகிறது.

துப்பாக்கி கோரும் மட்டக்களப்பு பிரதேச சபை உறுப்பினர்

துப்பாக்கி கோரும் மட்டக்களப்பு பிரதேச சபை உறுப்பினர்

யானைகள் அட்டகாசம்

காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் மேட்டு நிலப் பயிர்கள் உட்பட நெற் செய்கை விவசாயத்தையும் நாசமாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தென்னை,வாழை உட்பட பல பயிரினங்களையும் துவம்சம் செய்துள்ளதாகவும் துவிச்சக்கர வண்டியில் வந்த விவசாயி ஒருவரை தாக்க முற்பட்ட போது தான் துவிச்சக்கர வண்டியை விட்டு ஓடியதில் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்: உயிர் தப்பிய விவசாயி | Wild Elephants Attack Farmer Escapes With Life

குறித்த கிராமத்தின் பிரதான வீதியில் யானை வேலி அமைத்தாலும் ஊருக்குல் படையெடுக்கும் யானைகளை கட்டுப்படுத்தி தங்களது உயிர்களை உடமைகளை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

அத்துடன் பெரும்போக நெற் செய்கை விதைத்து 45 நாட்களை கடந்துள்ள நிலையில் நெற்பயிர்ச் செய்கையையும் அழித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தாந்தாமலை முருகன் ஆலய விவகாரம் : தொல்பொருள் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தாந்தாமலை முருகன் ஆலய விவகாரம் : தொல்பொருள் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நஷ்ட ஈடு

அழிவுக்கான நஷ்ட ஈடுகளை கேட்டால் ஒரு ஏக்கருக்கு ரூபா 3000_4000 வரை தருகின்றனர் விதை நெல் ஒரு ஏக்கருக்காக சுமார் 7000 ரூபாவாக உள்ளது இனியும் எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் எனவும் தேர்தல் காலங்களில் மாத்திரம் வரும் அரசியல்வாதிகள் தற்போது உயிர் போன பின்பு தான் வருவார்களா எனவும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளான பிரதேச குடியிருப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருகோணமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்: உயிர் தப்பிய விவசாயி | Wild Elephants Attack Farmer Escapes With Life

தங்களது பிள்ளைகளை வைத்து கொண்டு இரவு நேரங்களில் பீதியுடன் தூங்க வேண்டியுள்ளதாவும் பாடசாலைகளுக்கு அனுப்பவும் பயத்துடனான நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து உயிர்களை பாதுகாக்க உரிய உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாவீரர்களது கனவை அரசாங்கம் நனவாக்க வேண்டும் - சுமந்திரன் கோரிக்கை

மாவீரர்களது கனவை அரசாங்கம் நனவாக்க வேண்டும் - சுமந்திரன் கோரிக்கை

GalleryGalleryGalleryGalleryGallery
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US