உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்பு
மட்டக்களப்பு(Batticaloa) -வெல்லாவெளி வனஜீவராசிகள் சுற்றுவட்டாரக் காரியாலயப் பிரிவிற்குரிய திக்கோடையில் இன்று(25) வாய்க்கால் ஒன்றினுள் சுமார் 20-25 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாகவிருந்து வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் காட்டுயானைகளின் அட்டாகாசங்களும், தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், உயிரிழந்த இந்த காட்டு யானையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
காட்டு யானை
இந்நிலையில், அப்பகுதியில் இதுவரையில் காட்டு யானைப் பாதுகாப்பு வேலிகள் இன்மையால் யானை மனித மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
எனினும், இவ்வாறு உயிரிழந்த யாட்டு யானையின் உடலை வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு யானையின் மரணம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
