துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் யானைக் குட்டி மீட்பு
திருகோணமலை(Trincomalee) கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுக்கு அண்மித்த பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் காட்டு யானைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில், யானை குட்டி ஒன்று வீழ்ந்து கிடப்பதாக, கிராமவாசிகள் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலை அடுத்து, இந்த குட்டி யானை மீட்கப்பட்டுள்ளது.
காட்டு யானைக் குட்டி மீட்பு
இந்நிலையில், கந்தளாய் கால்நடை மருத்துவர் சமீர கலிங்கு ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றைய தினம்(23) காலை சம்பவ இடத்திற்குச் சென்று, குறித்த யானை குட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
சுமார் 3 வயதுடைய பெண் யானைக் குட்டியின் வயிறு மற்றும் தொடை பகுதிகளில் 6 குண்டுகள் பாய்ந்துள்ளதால் நடக்க முடியாத நிலையில் உள்ளதாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், யானைக்குட்டி அதன் தாயிடமிருந்து பிரிந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri