லீசிங் நிறுவனங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
நிதியியல் மற்றும் லீசிங் (Leasing) நிறுவனங்களால் வழங்கப்பட்ட வாகனங்கள் அல்லது ஏனைய சாதனங்களை, தவணைப் பணம் செலுத்தத் தவறியமைக்காக மீளக் கையகப்படுத்தும் போது சட்டப்பூர்வமான விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுமே செயற்பட வேண்டும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க லீசிங் நிதியியல் சட்டத்தின் 27 ஆம் பிரிவின்படி, ஏதேனும் ஒரு சொத்தை மீளக் கைப்பற்றுவதற்கு முன்னர் அப் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லீசிங் நிறுவனம் முன்கூட்டியே அறிவிப்பது கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலவந்தமாக வாகனங்களைக் கைப்பற்ற
மேலும், வாகனத்தின் உரிமையாளர் எதிர்ப்புத் தெரிவிக்கும் பட்சத்தில் பலவந்தமாக அல்லது அச்சுறுத்தி வாகனத்தைக் கைப்பற்ற முற்படாது மாவட்ட நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சட்டத்திற்குப் புறம்பாக பலவந்தமாக வாகனங்களைக் கைப்பற்ற முயலும் லீசிங் நிறுவனங்கள் அல்லது அவர்களின் முகவர்களுக்கு எதிராகக் கடுமையான குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!