மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு- இருவர் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை முனைக்காடு குடியிருப்பு பிரதேசத்திற்குள் காட்டு யானை ஒன்று ஊடுருவி தாக்கியதில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (27.02.2026) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
இதன்போது, பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் மாத்திரம் காட்டு யானைகளின் தாக்குதலால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய கதிர்காமத்தம்பி சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சம்
இந்நிலையில், யானையின் அட்டகாசத்தால் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் இருந்த யானையை வெளியேற்றும் நடவடிக்கையை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தற்போது காட்டு யானைகள் கூட்டமாக ஊடுருவி தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பயத்தில் உள்ளதுடன், கடந்த 13ஆம் திகதி வாழைச்சேனை நகருக்குள் யானைகள் ஊடுருவி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam