மட்டக்களப்பில் மின்கம்பத்தில் மோதி வாகனம் விபத்து: உயிர்தப்பிய சாரதி
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக வட்டா ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (27.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணை
காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் வகை வாகனமே தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மின்கம்பத்தில் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, வாகனத்தை இயக்கிச் சென்ற சாரதி எந்தவித காயங்களும் இன்றி உயிர்தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த வாகனத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து விழுந்துள்ளது. இந்த விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புலம்பெயர் தமிழர்களுடன் என்பிபி அரசு தெளிவான ஒரு உடன்பாட்டை கொண்டுள்ளது! விமல் வீரவன்சவின் பகிரங்கம்....
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam