வாட்ஸ்அப் வெப் சேவையை பயன்படுத்துவதில் சிக்கல்! ஐபோன் பயனாளர்கள் பாதிப்பு
உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (27) காலை வாட்ஸ்அப் சேவையை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஐபோன் பயனர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ அறிக்கை
இந்தச் சிக்கல்கள் தொடர்பாக 'டவுண்டெக்டர்' (Downdetector) இணையத்தளத்திற்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான எண்ட்ரொய்டு (Android) பயனாளர்களுக்கு இந்தச் சேவை வழக்கம் போல் இயங்குவதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்பதுடன்,பெரும்பாலான பயனர்களுக்கு இந்த சேவை வழக்கம் போல் செயல்படுவதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் ஆன்மா சாந்தியடையவே மகிந்த பழிவாங்கப்படுகின்றார்! ராஜபக்ச தரப்பு அதிரடிக் குற்றச்சாட்டு
நான் அரசாங்கத்தையே விமர்சித்தேன்! சிறுபான்மையினரை விமர்சிக்கவில்லை - விளக்கம் கூறும் லக்ஸ்மன் கிரியெல்ல