அநுர ஆட்சியில் இடைநிறுத்தப்பட்ட விசாரணை..! அடுத்து தண்டனை கைதியாகும் முக்கிய பிரமுகர்
குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக நேற்றைய தினம்(31) நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மைத்திரிக்கு நெருக்கமானவரால் ஏழு தடவை மறைக்கப்பட்ட இரகசிய உளவுத்துறை தகவல்..! ஹேமசிறியின் உருக்கமான வாக்குமூலம்
இது தொடர்பில் இன்று(01.08.2026) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர குற்றவியல் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால், ஷானி அபேசேகர மற்றும் ரவி சேனவிரத்ன ஆகியோருக்கும் அதேபோன்ற அல்லது அதனை விட வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம்.
அடுத்தடுத்து சிக்கப்போகும் NPP ஆட்சியில் உள்ள அதிகாரிகள்
மேலும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மேற்குறிப்பிட்ட இரு அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், உளவுத்துறை மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் பல்வேறு தவறுகள் இடம்பெற்றுள்ளன.
ஷானி அபேசேகர மற்றும் ரவி சேனவிரத்ன ஆகியோரின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த விசாரணை, ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட நிலையில், அந்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும்.
அத்துடன், விசாரணை நடைபெறும் காலப்பகுதியில் ஷானி அபேசேகரை CID பணிப்பாளர் பதவியிலிருந்தும், ரவி சேனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்குமாறும் கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.