பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை : என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - வருத்தத்தில் அலி சப்ரி
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
புலனாய்வு எச்சரிக்கைகள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத்தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னரே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமைத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும், குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்! பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி தொடர்பில் வெளியான தகவல்
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan