மட்டக்களப்பு படுவான் நிலப்பரப்பை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் காட்டு யானைகள்
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்திற்குள் நேற்று(09.10.2025) அதிகாலை 03 மணியளவில் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள 03 வீடுகளையும் தென்னை, வாழை, உள்ளிட்ட பயிரினங்களையும், துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளையில் இவ்வாறு காட்டுயானைகள் திடீரென கிராமத்திற்குள்ள புகுந்ததனால் அங்குள்ள மக்கள் மயிரிழையில் உயிர் தப்பிய தாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இவ்வாறு மெல்ல மெல்ல கிராமங்களுக்குள் உட்புகுந்த காட்டுயானைகள் தற்போது மக்கள் குடியிருப்புக்குள்ளேயே நிலைகொண்டுள்ளதனால் அப்பகுதி மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அங்கலாய்க்கின்றனர்.
முற்றுப்புள்ளி
காலத்திற்கு காலம் மாற்றம் பெறும் அரசாங்கங்கள் காட்டுயானைப் பிரச்சனைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக தெரிவித்து வந்திருந்த போதிலும் அதற்கு முற்றுப் புள்ளி வைக்காதுள்ளனர்.
இந்நிலையில், தற்போது நாட்டைப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கமாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
